நான் கவர்னர் கட்சிடா – கிருஷ்ணசாமி ஆவேசம்

கால் நூற்றாண்டுகளாக ஒரு எம்பி பதவிக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி வைத்து தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, தற்போது தனக்கென்று புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து தமிழக கவர்னரின் தீவிர ஆதரவாளராக மாறியுள்ளார்.

சமீபத்தில் கவர்னருக்கு ஆதரவாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கும் பங்கு இருக்க வேண்டும்; அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கடந்த 06.01.2022 அன்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்கள்.

சட்டப்படியும், நியாயப்படியும் துணைவேந்தர் நியமனங்கள் ஆளுநர் முழுக் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். பெரும் பங்கு என்ன? ஒரு சிறு பங்கு கூட மாநில அரசுக்கு இருக்கக்கூடாது என்பதே நம்மைப் போன்ற பெரும்பாலான கல்வியாளர்களின்??! கருத்தாகும்.

துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர்களின் அதிகாரங்களைப் பறித்து பல்கலைக்கழகங்களை கழக குடும்பச் சொத்தாக மாற்ற எத்தனிப்பார்களேயானால் அதுவே திமுக அரசை தமிழக மக்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றி அவர்களை வீட்டுக்கு அனுப்பும் பணிகளுக்கான துவக்கமாக அமையலாம் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Tamil News Today