இதற்கு மேலும் காத்திருந்தால் தனது பதவியாசை நிராசையாகி விடும் என்பதால் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முழுவீச்சில் தயாராகி விட்டார் தேமுதிக பொருளாளர். கட்சிக்கும் பிரகாசமான எதிர்காலம் இல்லை என்பதையும் உணர்ந்து கூட்டணிக்கு அனைத்து தரப்பிலும் துண்டை போட்டு வைக்கிறார்.
திமுக, அதிமுகவை தொடர்ந்து ” சசிகலாவால் ஆதாயம் பெற்றவர்கள் அதிகமாக உள்ளார்கள். தற்போது அவரை வேண்டாம் என்று சொல்வது மனதுக்கு கடினமாக உள்ளது” என சசிகலாவுக்கும் ஒரு ஆதரவைப் போட்டு வைத்திருக்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகள் அல்லது மூன்று கட்சிகளுடன் கூட்டணி பேசுவது தேமுதிகவிற்கே உரிய சிறப்பு.