நாட்டையே அடைய துடிக்கிற எனக்கு வீடில்லை – அதிபர்

நாட்டையே அடைய துடிக்கிற எனக்கு வீடில்லை – அதிபர்

கடலூரில் நாம் தமிழர் கட்சி விழாவில் சீமான் ” என்னிடம் இன்றும் கேட்கிறார்கள்.. உனக்கு என்ன வருமானம் வருகிறது எப்படி சாப்பிடுகிறாய் என?. வெல்லமண்டி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி எப்படி இவ்வளவு பெரிய பணக்காரர் ஆனார் என கேட்டிருக்க வேண்டும். ஜெயலலிதா மார்க்கெட் இல்லாத நடிகையாகத்தானே வீட்டில் இருந்தார். கடைசிகாலத்தில் இவ்வளவு பெரிய சொத்து.. 800 ஏக்கரில் எஸ்டேட் வாங்குற அளவுக்கு சொத்து எப்படி வந்ததுன்னு கேட்டிருக்கனுமே..

திருட்டுத்தனமாக டிரெயின் ஏறி வந்த கருணாநிதியின் குடும்பத்துக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது என கேட்டிருக்கனும்… தம்பி உதயநிதி தொடர்ச்சியாக படம் எடுக்கிறார்… ஒரு படமும் ஓடவில்லை.. ஆனால் தொடர்ந்து உதயநிதி படம் எடுக்கிறாரே.. பணம் ஏது?

உண்மையில் எனக்கு வீடு இல்லை…நாட்டையே அடைய துடிக்கிற எனக்கு வாழ்வதற்கு வீடில்லை என்பது வரலாற்றில் எவ்வளவு பெரிய துயரம் பாருங்க.. என்று பேசினார்.

அரசியல் செய்திகள்