நாடு முழுவதும் மின் தட்டுப்பாடு அபாயம்

நாடு முழுவதும் மின் தட்டுப்பாடு அபாயம்

இந்தியா முழுவதும் உள்ள 135 அனல் மின் நிலையங்கள் மொத்த மின் தேவையில் 70 சதவீதம் அளவுக்கு பூர்த்தி செய்கின்றன. தற்போது பெரும்பான்மையான அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு வெறும் மூன்று நாட்களுக்கு மட்டுமே இருப்பதாக செய்திகள் வெளியாகின. 20 அனல்மின் நிலையங்கள் மின் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தி விட்டன.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மின் வெட்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் சில நாட்களில் நாடு முழுக்க மின்வெட்டு பிரச்சினை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அச்சம் உருவானது.

நாடு முழுக்க நிலக்கரி இருப்பு தட்டுப்பாடு நிலவுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

அரசியல்