தேர்தலில் வென்றவர்களை சந்தித்த விஜய்

தேர்தலில் வென்றவர்களை சந்தித்த விஜய்

நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்றவர்கள் இன்று சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர். விஜய் இவர்களுக்கு தனித்தனியாக பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

மக்கள் உங்களை நம்பி ஓட்டு போட்டுள்ளார்கள். எனவே மக்களுக்கு தேவையான விஷயங்களை, உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும்” என்று விஜய் அவர்களிடம் கூறியதாக தெரிகிறது.

அரசியல் செய்திகள்