திமுகவின், ஆரிய அடிவருடித்தனம் – சீமான் காட்டம்

திமுகவின், ஆரிய அடிவருடித்தனம் – சீமான் காட்டம்

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பிரதமர் மோடியின் மதம் சார்ந்த நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்ய யார் அனுமதித்தது? அத்துமீறிக் கோயிலுக்குள் நுழைந்து பாஜகவினர் திரையிட்டதை தடுக்காது காவல்துறை என்ன செய்ததென்று புரியவில்லை. இத்தகைய செயல்களில் ஈடுபட்ட பாஜகவினர் மீது எவ்வித வழக்கும் தொடுக்காது திமுக அரசு அமைதி காப்பது வெட்கக்கேடானது.

கோயில்களும், வழிபாட்டுத்தலங்களும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய மதப்பரப்புரைக்கூடங்களாக மாறுமென்றால், அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா?பாஜகவை எதிர்ப்பதாகக் கூறி, தேர்தலில் பரப்புரை செய்து வாக்கு வேட்டையாடிய திமுக, தற்போது அதிகாரமிருந்தும் எதிர்ப்புணர்வைக் காட்டாது சமரசம் செய்வது ஆரிய அடிவருடித்தனமாகும் என்று நாம் தமிழர் சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அரசியல் செய்திகள்