தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர்

தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர்

அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா அமைச்சராக இருந்தபோது சத்துணவு திட்டத் துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று கொண்டு ரூ70 லட்சம் வரை மோசடி செய்து விட்டதாக, அவரது உறவினர் குணசீலன் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். சரோஜா மற்றும் அவரது கணவரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனு 2 முறை விசாரணைக்கு வந்தபோது, சரோஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு மீதான விசாரணைக்கு வாய்தா கேட்டார்.

இதற்கிடையில், போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் இருவரும் தலைமறைவாகி விட்டதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.

அரசியல் செய்திகள்