தர்மயுத்தம் பார்ட் 2 இபிஎஸ்ஸை எதிர்த்து தொடங்கினார் ஓபிஎஸ்

தர்மயுத்தம் பார்ட் 2 இபிஎஸ்ஸை எதிர்த்து தொடங்கினார் ஓபிஎஸ்

சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் தெரிவித்த கருத்தால் அதிமுக மேற்கு தெற்கு என்று பிரிந்து கிடக்கிறது. ஓபிஎஸ் கருத்துக்கு அதிமுகவிற்கு உள்ளே கிடைத்த ஆதரவை விட வெளியில் ஆதரவு அதிகம் தினகரன் உட்பட.

இந்நிலையில் பசும்பொன் சென்று திரும்பிய ஓபிஎஸ் மதுரையில், தென் மாவட்ட அதிமுகவினருடன், அரசியல் ஆலோசனையில் ஈடுபட்டார், அதிமுகவின் இன்றைய நிலை குறித்து விவாதித்ததாக தெரிகிறது. முன்னாள் அமைச்சர்கள் உட்பட திரளான அதிமுகவினர் கலந்து கொண்ட செய்தி இபிஎஸ்ஸை கவலையடையச் செய்திருக்கிறது.

கடைசியில் தென் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமான முல்லைப்பெரியாறு அணை நிலை குறித்து பேசியதாக பத்திரிக்கையாளர்களிடம் சமாளித்திருக்கிறார் ஓபிஎஸ்.

அரசியல் செய்திகள்