தமிழகத்தில் 246 கோடி ரூபாய் முறைகேடு – யார் ஆட்சியில்?

தமிழகத்தில் 246 கோடி ரூபாய் முறைகேடு – யார் ஆட்சியில்?

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்தில் 246 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் ஊழல் அதிமுக ஆட்சியிலா அல்லது தற்போதைய திமுக ஆட்சியிலா என்று சொல்லாமல் மையமாக கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் 2021-22 மத்திய அரசு அளித்த ₹3524 கோடிக்கு பிறகு பணமே அனுப்ப வில்லை என்று குறிப்பிட்டு தான் கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால் மத்திய இணை அமைச்சரோ, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு இந்த நிதியாண்டில் 2 தவனைகளாக ரூ.6,255 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி ஒதுக்கீட்டை மறைத்துவிட்டு, அரசியல் நாடகத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவருகிறார்” என்று கூறியுள்ளார்.

அரசியல் செய்திகள்