நாக்பூர் டவுசர் பாய்ஸ் – ராகுல் காட்டம்

நாக்பூர் டவுசர் பாய்ஸ் – ராகுல் காட்டம்

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, வேல் யாத்திரை, பிரியாணி அண்டா யாத்திரை மற்றும் சிறு சிறு மதக்கலவரங்கள் மூலம் தங்கள் கட்சி வளர்ந்து விட்டதாக நினைத்து கொண்டு அதிமுகவை மிரட்டும் பிஜேபியை சல்லி சல்லியாக உடைக்கிறார்.

தமிழகத்தின் எதிர்காலத்தை நாக்பூர் டவுசர் பாய்ஸ் (RSS) தீர்மானிக்க முடியாது, அதை தமிழக இளைஞர்கள் தான் தீர்மானிப்பார்கள்​ என்று காட்டமாக பேசியுள்ளார்.

ஒரே நாடு, ஒரே மொழி என்கிற கொள்கையை முன்னெடுக்கிறது பாரதிய ஜனதா கட்சி. தமிழ் ஒரு மொழி இல்லையா? தமிழர்களுக்கு தனி கலாசாரம் இல்லையா?

பஞ்சாபி ஒரு மொழி அல்லவா? வடகிழக்கு மாநிலங்களுக்கு என தனி மொழிகள் இல்லையா?

வங்க மக்கள் தனி மொழி பேசவில்லையா? வங்கத்துக்கு தனி கலாசாரம் இல்லையா? அதனால்தான் ஒரே நாடு, ஒரே மொழி, என்பதை நாம் ஏற்க முடியாது என்று சரியான புள்ளியை கையில் எடுக்கிறார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகளின் முதுகெலும்பையே உடைத்தவர் மோடி என்று அதனால் மிகவும் பாதிக்கப்பட்ட கோயம்புத்தூரில் ராகுல் பேசியது குறிப்பிடத்தக்கது.

சீனா என்ற வார்த்தையே மோடியின் வாயில் இருந்து வரவில்லையே.. எங்கே போனது 56 இஞ்ச் மார்பு? என்ற ராகுலின் நக்கலான பேச்சுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்.

Latest Trending News political