தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு  சீரழிந்துள்ளது – சீமான்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது – சீமான்

தேனி உத்தமபாளையத்தில், வயதான தம்பதிகள் கழுத்து அறுத்து கொலை, கடலூரில் முந்திரி ஆலை தொழிலாளி கொலை, மதுரையில் உணவக உரிமையாளர் கொலை, மயிலாடுதுறையில் கோயில் காவலாளி கொலை, திண்டுக்கலில் 4 வயது சிறுவன் கொலை, வாணியம்பாடியில் மஜக பொறுப்பாளர் கொலை, சென்னையில் விசிகவை சேர்ந்தவர் கொலை, கன்னியாகுமரியில் ஆதித்தமிழர் ஆணவப் படுகொலை என மாநிலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நடைபெறும் படுகொலைகள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்குச் சீரழிந்துள்ளது என்பதையே வெளிக்காட்டுகிறது.

ஆளுங்கட்சியான திமுகவின் கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியைப் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச்செயலாளர் நடேச. தமிழார்வன் ) பகல் பொழுதில் சாலையில் வைத்து சர்வ சாதாரணமாகப் படுகொலை செய்ய முடிகிறதென்றால், எளிய அடித்தட்டு மக்களின் பாதுகாப்பின் நிலையென்ன என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது என்று சீமான் கவலை.

அரசியல் செய்திகள்