டாக்டரில் சம்பாதித்ததை அண்ணாத்தேயில் இழந்த தியேட்டர் அதிபர்கள்

டாக்டரில் சம்பாதித்ததை அண்ணாத்தேயில் இழந்த தியேட்டர் அதிபர்கள்

50 கோடி, 100 கோடி, 200 கோடி வசூல் என்று ஏலம் விட்ட நிலையில் ரஜினியின் “அண்ணாத்தேயால் இழந்ததை தமிழக தியேட்டர் அதிபர்கள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருக்கிறார்கள். கபாலியால் தனக்கு நஷ்டம் என்று கலைப்புலி தாணு வெளிப்படையாக அறிவித்தார். காலா” படம் சரியாக போகவில்லை என்ற நிலையில் தனுஷ் பேனர் என்பதால் சமாளித்தார். பேட்ட” படம் “விஸ்வாஸம் படத்திடம் பல்பு வாங்கிய நிலையில், தர்பார் பட நஷ்ட விவகாரத்தில் ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டனர் விநியோகஸ்தர்கள்.

வசூல் பற்றிய வெற்று கூக்குரல்கள் முடிந்த நிலையில் தமிழக தியேட்டர்களின் வருமானம் அதல பாதாளத்தில் இருக்கிறது. படத்தயாரிப்பு சன் பிக்சர்ஸ், விநியோகம் முதல்வர் பையன் உதயநிதி, எப்படி பிரச்சனையை வெளிக்கொண்டு வருவது என்று தெரியாமல் முழிக்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படத்தில் கிடைத்த வருமானத்தை “அண்ணாத்தேயில் தொலைத்ததாக பெரும் புலம்பல்

சினிமா செய்திகள்