ஜெ. வுக்கு 2 நினைவிடங்கள் எல்லாம் ஓவர் – நீதிமன்றம்

ஜெ. வுக்கு 2 நினைவிடங்கள் எல்லாம் ஓவர் – நீதிமன்றம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  “வேதா நிலையம்” நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்து அதற்கான சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையமும் அங்குள்ள அசையும் சொத்துகளும் அரசுடமையாக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பின்வருமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது, ‘ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கியது மற்றும் நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்கிறோம். வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் 3 வாரங்களில் ஒப்படைக்க உத்தரவிடுகிறோம். வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு ?.

அரசியல் செய்திகள்