ஜெய் பீம் வெற்றி- தியேட்டர் அதிபர்கள் ஒப்பாரி

ஜெய் பீம் வெற்றி- தியேட்டர் அதிபர்கள் ஒப்பாரி

அடுத்தடுத்து சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்து நடிக்கும் படங்கள் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன. பலமொழிகளில் மிகச் சுலபமாக வெளியிட முடிவதால் படத்திற்கான வீச்சும் நன்றாக சென்றடைகிறது. அந்த வகையில் சூர்யாவின் சூரரைப்போற்று வைத் தொடர்ந்து வெளியாகி இருக்கும் ஜெய் பீம் ஓடிடியில் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் ஓரே ஒரு படத்தை அனைத்து திரையரங்கிலும் திரையிடுவது, பின்பு அந்த படத்தால் நஷ்டம் என்று அந்த நடிகர் வீட்டு முன் போராடுவது என்று ஜல்லியடிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யா மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஏதாவது ஓட்டையை கண்டு பிடித்து சூர்யாவை விமர்சித்து ஒப்பாரி வைத்து வருகிறார்கள்.

சினிமா செய்திகள்