ஜின்னாவோடு இந்திய முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை – ஓவைசி

ஜின்னாவோடு இந்திய முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை – ஓவைசி

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ‘‘சர்தார் பட்டேல், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோர் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்தார்கள். இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடினார்கள். இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் ஆர்எஸ்எஸ் சித்தாத்தத்துக்கு தடைவிதித்தார்’’ எனக் கூறி உள்ளார்.

சுதந்திரத்திற்காக போராடிய தேசத்தலைவர்களுடன் ஜின்னாவை இணைத்து அகிலேஷ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஓவைசி, அகிலேஷ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூறியதாவது:

‘‘முகமது அலி ஜின்னாவோடு இந்திய முஸ்லிம்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எங்களுடைய மூதாதையர்கள் இரண்டு நாடு என்ற கோட்பாடை நிராகரித்தனர். இந்தியா தங்களுடைய நாடு என முடிவு செய்தனர். இதனை அகிலேஷ் புரிந்து கொள்ள வேண்டும்.

அகிலேஷ் யாதவ் ஒரு குறிப்பிட்ட மக்களை சந்தோசப்படுத்த இவ்வாறு கூறியிருக்கலாம். வரலாற்றை படிக்க வேண்டும். அகிலேஷ் யாதவ், அவரது ஆலோசகரை மாற்ற வேண்டும்.

அரசியல் செய்திகள்