சென்னையில் கனமழை – ஓபிஎஸ், இபிஎஸ் எங்கே

சென்னையில் கனமழை – ஓபிஎஸ், இபிஎஸ் எங்கே

சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 7.30 மணிவரையில் சென்னையில் 207 மி.மீ. மழை பெய்துள்ளது. 2015க்கு பிறகு பெரும் மழையை சந்தித்து வருகிறது சென்னை. செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னையில், இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழையால் சாலையில் நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் உட்புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். களத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களான ஓபிஎஸ், இபிஎஸ்ஸை காணோம் தற்போது வரை.

அரசியல் செய்திகள்