சூதாட்ட புகழ் சிஎஸ்கே விழாவில் முதல்வர்

சூதாட்ட புகழ் சிஎஸ்கே விழாவில் முதல்வர்

2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கான பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்திட வேண்டும், முதலமைச்சராக வந்திட வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். நான் முதலமைச்சராக வந்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் தோனியினுடைய ரசிகனாக வந்திருக்கிறேன். நான் மட்டும் வரவில்லை, என் பேரன், பேத்திகள் எல்லாம் வந்திருக்கிறார்கள். எல்லோரும் அவருடைய ரசிகர்கள். என் அப்பாவும் தோனியினுடைய ரசிகர்தான்,” என்று தெரிவித்தார்

தோனி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இப்போது அவர் கிட்டத்தட்ட சென்னைக்காரரைப் போலவே ஆகிவிட்டதாகக் கூறினார் மு.க. ஸ்டாலின்.

“தமிழர்கள் பச்சைத் தமிழர்கள் என்றால், தோனி அவர்கள் மஞ்சள் தமிழர்.  டெண்டுல்கருக்குப் பிறகு இந்தியாவில் கிரிக்கெட் என்றால் அது தோனிதான் எனும் நிலை உருவாகியிருக்கிறது” என்றார் மு.க. ஸ்டாலின்.

அரசியல் செய்திகள்