சிம்புவின் மாநாடு வரும் ஆனா வராது

சிம்புவை வைத்து படம் தயாரித்து அதை வெளியிடுவதற்குள் தயாரிப்பாளர் நொந்து போவது வழக்கம். ஆனால் தொடர்ச்சியாக மொக்கை படங்களா குடுத்த சிம்பு சுமாரான ஹிட்டாவது கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனால் ‘ மாநாடு’ படத்தை பெரிதும் எதிர்பார்த்து இருந்தார். வெங்கட் பிரபு கதை திருட்டு, சிம்புவின் முந்தைய பட நஷ்ட விவகாரம் மற்றும் கொரானா என்று சிம்புவை சுற்றி சுற்றி துரத்தியது பிரச்சனைகள். உஷா ராஜேந்தர் ஒரு பக்கம் முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று புலம்ப, சிம்பு விழா மேடையில் கண்ணீர் விட ஒரு வழியாக படம் வெளிவந்து விடும் என்று இருக்கையில் ‘ தமிழக அரசு தியேட்டர் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம்’ என்று சொல்லி விட மீண்டும் “மாநாடு” வெளியீடு கேள்விக்குறி ஆகியுள்ளது.

சினிமா செய்திகள்