சிகரெட் கடை: துரை வைகோ – பாஜக விமர்சனம்

சிகரெட் கடை: துரை வைகோ – பாஜக விமர்சனம்

மதிமுகவில், இப்போது வந்து சேர்ந்திருக்கின்ற துரை வைகோ, முதலில் வெறும் ‘சிகரெட் கடை’ வைத்து கொண்டிருந்தார். அவருக்கு வைகோவை நம்பி திமுகவை விட்டு வெளியேறி உயிர் நீத்தவர்களுக்கு அவர் செய்த துரோகம் தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு துரோக அரசியல் தெரியாது. தமிழினத்தை கொன்று குவித்த திமுக என்று கூறிவிட்டு ஒரு எம்.பி பதவிக்காக அதே திமுகவிடம் கட்சியை அடகு வைத்த கேவல அரசியல் வைகோவுக்கு தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு தெரியாது.

வாரிசு அரசியல்’ என்று ஸ்டாலினை விமர்சனம் செய்து விட்டு, ஓட்டு அரசியலுக்காக ‘எதிர்கால முதல்வரே’ என்று ஸ்டாலினை அழைத்த சந்தர்ப்பவாத அரசியல் தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு தெரியாது. வாயை மூடி மௌனம் காக்க வேண்டியது வைகோ தானேயன்றி அண்ணாமலை அல்ல. பாஜக குறித்தோ, அண்ணாமலை குறித்தோ விமர்சனம் செய்யும் தகுதி, துரோக அரசியல் செய்யும் வைகோவுக்கு கிடையாது” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர், நாராயணன் திருப்பதி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.

அரசியல் செய்திகள்