சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் இல்லை – பாஜக

சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் இல்லை – பாஜக

அதிமுக வழிகாட்டுதல் குழு, சசிகலா, ஓபிஎஸ் என்று எல்லோரும் எடப்பாடி பழனிச்சாமியை அசைத்து பார்க்க போராடுகையில், பாஜக சிம்பிளாக அவரை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து தூக்கியிருக்கிறது.

திருப்பத்தூரில், பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரனை, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என குறிப்பிட்டு கல்வெட்டு பதித்து அதிமுகவை அசிங்கப்படுத்தியிருக்கிறது. இப்ப தான் ஓபிஎஸ் ஆதரவாளர், அதிமுக வழி காட்டுதல் குழு உறுப்பினர் மாணிக்கத்தை, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கும் போதே தூக்கியது.

“எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க, அவங்க ரொம்ப நல்லவங்க” என்று இபிஎஸ், ஓபிஎஸ் பற்றி பாஜக பாராட்டுவது இதனால் தான் போல.

அரசியல் செய்திகள்