கோவை பள்ளி மாணவி தற்கொலை – தனலாபம்’ வானதி எம்எல்ஏ அமைதி

கோவை பள்ளி மாணவி தற்கொலை – தனலாபம்’ வானதி எம்எல்ஏ அமைதி

கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி ஆசிரியரின் கொடூர செயலால் மனவேதனை அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி தற்கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் இனிமேல் இதுபோல் சம்பவம் நடக்காமல் தடுக்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவியை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, மாணவியும், மாணவியின் பெற்றோர்களும் பலமுறை புகார் தெரிவித்தும் ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்த சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரே கண்டனம் தெரிவித்து வருகையில் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அமைதி காத்து வருகிறார்.

அரசியல் செய்திகள்