கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட்

கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட்

துள்ளுவதோ இளமையில் தந்தையால் அறிமுகபடுத்தப்பட்டு, சகோதரர் இயக்கத்தில் காதல் கொண்டேன்” என்ற வெற்றி படம் கொடுத்தாலும், தனுஷ் அளவுக்கு விமர்சனம் என்ற பெயரில் அசிங்கங்களையும், அவமானங்களையும் சந்தித்த நடிகர் வேறு யாரும் தமிழகத்தில் இல்லை.

கடின உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு என்று திரையில் தனுஷ் காட்டிய மாயாஜாலம் அவரை அவருக்கான இடத்தில் நிறுத்தியிருக்கிறது. 

தேசிய விருது, மூன்று முறை பிலிம்பேர் விருது மற்றும் பல விருதுகள் என்று சத்தம் போடாமல் சாதிக்கும் தனுஷ் மிகப் பெரிய இளைஞர் பட்டாளத்துக்கு ரோல் மாடல்.

நன்றாக பாடக்கூடிய நடிகர்கள் நிறையப் பேர் இருந்தாலும், ஒரு பாட்டுக்காக மும்பையில் அமிதாப் தலைமையில் விழா எடுத்தார்களென்றால் அது கொலவெறி க்காகத்தான்.

புதுப்பேட்டை, மரியான், யாரடி நீ மோகினி, அனேகன், மாரி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்கள் தனுஷின் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்திய படங்கள்.
வெற்றி மாறனுடன் இணைந்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன்  என்று தனுஷ் நடித்த படங்கள் வேற லெவல். 
தமிழ் படங்கள் போதாதென்று ” ரஞ்சனா, சமிதாப், (அமிதாப்புடன்) இப்போது அடரங்கி ரே” என்று இந்தியிலும் தனது முத்திரையை அழுத்தமாக பதித்து வருகிறார்.கமலுக்கு பிறகு இந்தியில் 100 நாள் படம் கொடுத்த ஒரே தமிழ் நடிகர் தனுஷ் தான்.
இதற்கிடையில் இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ், ராஜ் கிரணை வைத்து ” ப.பாண்டி” என்று​ தனது மற்றொரு முகத்தைக் காட்டினார்.
நடிப்பில் மட்டுமில்லாது நடனத்திலும் பட்டையை கிளப்புவார் தனுஷ், ரெளடி பேபியின் சாதனை இந்தியா அறிந்தது.

இந்தியைத் தொடர்ந்து ” The Extraordinary Fakir” என்று ஹாலிவுட்டிலும் கால் பதித்தார் தனுஷ். தற்போது இரண்டு நல்ல செய்திகள் தனுஷ் ரசிகர்களுக்கு
அவென்ஞர்ஸ் பட இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.Golden Globe Awardsல் தனுஷின் “அசுரன், சூர்யாவின் ” சூரரைப் போற்று” படத்துடன் திரையிடப்படுகிறது.
மேலும் பல அவதாரங்களை தனுஷ் எடுக்க வாழ்த்துக்கள்.

Cinema & Entertain