கோயில் நகை 100 சவரனை கையாடல் செய்த பாஜக பிரமுகர்

கோயில் நகை 100 சவரனை கையாடல் செய்த பாஜக பிரமுகர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரமாணிக்கம் கிராமத்தில் வீர பத்ரகாளியம்மன் கோயில், சந்தி அம்மன் கோயில், சுடலை மாடன் சாமி கோயில் என மூன்று கோயில்களை பாஜக பிரமுகரும், உள்ளூர் முக்கியஸ்தருமான பட்டு ராமசுந்தரம் நிர்வகித்து வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது.

சுமார் நூறு சவரன் கோவில் நகைகளை இந்து சமய அறநிலைத்துறையிடம் ஒப்படைக்கக் கோரி ஊர்மக்கள் மற்றும் அறநிலையதுறை அதிகாரிகள் கேட்டு வந்தனர். ஆனால் பட்டு ராமசுந்தரம் நகைகளை ஒப்படைக்கவில்லை. இதையடுத்து கிராம மக்கள், நகைகளை கையாடல் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை தக்காா் (Excutive officer) திருமதி.காந்திமதி தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தாா். கோயில் நகைகளை கையாடல் செய்ததாக பாஜக பிரமுகர் பட்டு ராமசுந்தரம், அவரது சகோதரர்கள் மற்றும் அவருக்கு துணை போனவர்கள் என 6 பேர் மீது 7 பிரிவுகளில் குரும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருப்பவர்களை தேடி வருகின்றனர்

அரசியல் செய்திகள்