கையெழுத்து போட்டால் 150 கோடி… ஆளுநர் ஷாக் தகவல்

கையெழுத்து போட்டால் 150 கோடி… ஆளுநர் ஷாக் தகவல்

எங்கள் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பெற்றது – அமித்ஷா

மேகாலயாவின் ஆளுநராக இருக்கும் சத்ய பால் மாலிக் தாம் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த போது நடந்த விஷயத்தை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு ஆளுநராக போன போது என்னிடம் 2 பைல்கள் வந்தன. ஒன்று அம்பானி தரப்பு பைல், மற்றொரு பிடிபி பாஜக கூட்டணி அரசின் அமைச்சராக இருந்த ஆர்எஸ்எஸ் தொடர்பு கொண்ட நபருடையது. இந்த 2 பைல் தொடர்பான விவகாரங்களிலும் முறைகேடு இருப்பதாக எனது செயலாளர்கள் என்னிடம் கூறினர், அதனை அடிப்படையாக கொண்டு 2 ஒப்பந்தங்களையும் கேன்சல் செய்தேன். ஆனால் கையெழுத்து போட்டால் எனக்கு 150 கோடி பணம் தருவதாக செயலாளர்கள் கூறினர். பிரதமர் பேரை பயன்படுத்தியதால் அவரிடமே இதை தெரிவித்து விட்டேன் என்று ஆளுநர் கூறியிருப்பது தற்போது தேசிய அளவில் பெரும் விவகாரமாக உருவெடுத்து உள்ளது..

அரசியல் செய்திகள்