கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் – வாய்ப்பு இல்லை

கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் – வாய்ப்பு இல்லை

தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், தமிழ் ஒரு பாடமாக உள்ளது. தமிழை பாடமாக பயில விரும்பும் மாணவர்கள் அதனை தேர்வு செய்து பயிலலாம். எந்த மாநிலத்தில் மத்திய அரசு பள்ளி இயங்குகிறதோ, அந்தந்த மாநில மொழி பாடமாக மட்டுமே இருக்கும். மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களின் குழந்தைகளுக்காகவே நடத்தப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படும் போது அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கிலேயே இந்த பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ஆகவே, அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

அரசியல் செய்திகள்