குஜராத்தில் கொரோனாவுக்கு 3 லட்சம் பேர் பலி – ராகுல்

குஜராத்தில் கொரோனாவுக்கு 3 லட்சம் பேர் பலி – ராகுல்

நாட்டிலேயே சிறந்ததாக குஜராத் மாடலை பாஜக முன்வைக்கின்றது. ஆனால் அங்கு இருக்கும் குடும்பங்கள் கொரோனா தொற்று காலத்தில் தங்களுக்கு மருத்துவமனையில் படுக்கையோ, வென்டிலேட்டரோ கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டிய நேரத்தில் நீங்கள் அங்கு இல்லை. மருத்துவமனையில் ரூ.10-15 லட்சத்தை இழந்ததோடு குடும்ப உறுப்பினர்களையும் இழந்துள்ளனர். ஆனால், இப்போதும் இழப்பீடு வழங்குவதற்கு நீங்கள் அங்கு இல்லை. என்ன மாதிரியான அரசு இது? குஜராத்தில் கொரோனாவால் 10 ஆயிரம் பேர் மட்டுமே இறந்ததாக அந்த மாநில அரசு கூறுவது பொய். அங்கு 3 லட்சம் பேர் கொரோனாவால் இறந்துள்ளனர் என்பதுதான் உண்மை. இதனை அறிய காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று கணக்கெடுத்து வருகின்றனர். பிரதமர் மோடி ரூ.8,500 கோடிக்கு புதிய விமானத்தை வாங்குகிறார். ஆனால், கொரோனாவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசிடம் பணம் இல்லை. கொரேனாவால் குடும்பத்தில் ஒருவரை இழந்த ஏழை குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கும் வரை அரசுக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கும் என்று ராகுல் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரசியல் செய்திகள்