குஜராத்தில் அசைவ உணவு கடைகளுக்கு தடை

குஜராத்தில் அசைவ உணவு கடைகளுக்கு தடை

குஜராத், ஆமதாபாத் மாநகராட்சி, சாலைகளில் உள்ள, அசைவ உணவு கடைகளை அகற்ற உத்தரவிட்டதுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டு தலங்கள் இருக்கும் இடங்களிலிருந்து 100 மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள அசைவ உணவு கடைகளையும் அகற்ற உத்தரவிட்டதுள்ளது. தடை குறித்து கருத்து தெரிவித்த, குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், மக்கள் தாங்கள் விரும்பிய உணவை உண்பதற்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இந்த உத்தரவுக்கு சாலையோர வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு வதோதரா, ராஜ்கோட் மற்றும் பவநகர் மாநகராட்சி அதிகாரிகளும் இதே மாதிரி அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது

தற்போதைய செய்திகள்