காவல் ஆய்வாளரை பாராட்டிய கமல்

காவல் ஆய்வாளரை பாராட்டிய கமல்

சென்னை, அண்ணா நகர் பகுதியில் உள்ள கல்லறை ஒன்றில் மரம் சாய்ந்து மயங்கி விழுந்து கிடந்த இளைஞரை, பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, தன் தோளில் தூக்கி ஓடினார். அவர் இளைஞரை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

“சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது. அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண காவல் அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை பாராட்டியுள்ளார் கமல்.

அரசியல் செய்திகள்