‘கலைஞர் உணவகம்’ – ஏட்டிக்கு போட்டி திமுக

‘கலைஞர் உணவகம்’ – ஏட்டிக்கு போட்டி திமுக

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தெரிந்தோ, தெரியாமலோ நடந்த ஒன்றிரண்டு உருப்படியான திட்டங்களில் ஒன்று தான் ‘ அம்மா உணவகம்’. இந்தியா முழுவதும் வெகுவாக பாராட்டப்பட்ட இத்திட்டம் மிகுந்த முறைகேடுகளுக்கிடையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. அம்மா உணவகம் ” என்ற பெயர் உறுத்தவே, ஆட்சி மாறியவுடன் அதை எப்படியாவது மூடி விட வேண்டும் என்று திமுக அரசு முயற்சி செய்தது. அனைத்து மட்டத்திலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பவே பின் வாங்கியது அரசு. தற்போது அந்த திட்டத்தில் ‘ கலைஞர் உணவகம்’ என்ற புதிய திணிப்பு க்கான வேலையில் இறங்கியுள்ளது அரசு.

அரசியல் செய்திகள்