கண்களை பிடுங்கிவிடுவேன், கைகளை வெட்டிவிடுவேன் -பிஜேபி எம்பி

கண்களை பிடுங்கிவிடுவேன், கைகளை வெட்டிவிடுவேன் -பிஜேபி எம்பி

ஹரியானா, ரோத்தக் மாவட்டத்தின் கிலோய் எனும் கிராமத்திற்கு, பாஜக தலைவர் மனீஷ் குரோவர் வந்துள்ளதை அறிந்து விவசாயிகள் அங்கு சென்று, மனீஷ் குரோவர், விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியிருப்பதாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்கும் வரை அவரை வெளியே விட மாட்டோம் எனவும் கூறி முற்றுகையிட்டனர். இதனால் சுமார் 8 மணி நேரங்களுக்கு மேலாக குரோவர் உள்ளிட்டோர் சிறை வைக்கப்பட்டனர்.

ரோஹ்தக் தொகுதி பாஜக எம்.பி அரவிந்த் சர்மா, இன்று கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பேசுகையில், மனீஷ் குரோவரை எதிர்ப்பவர்களின் கண்களை பிடுங்கிவிடுவேன், கைகளை வெட்டிவிடுவேன் என ஆவேசமாக பேசியபோது அவரது ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அரசியல் செய்திகள்