ஓபிஎஸ் – 82 கோடி வருமான வரி பாக்கி?

ஓபிஎஸ் – 82 கோடி வருமான வரி பாக்கி?

சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற ரெய்டின் போது கைப்பற்றப்பட்ட சிவப்பு நிற டைரியில் யாருக்கெல்லாம் ஒப்பந்தத்தாராக இருந்த போது சேகர் ரெட்டி பணம் அனுப்பினார் என்ற குறிப்பு இருந்ததாக தெரிகிறது.

சேகர் ரெட்டி மூலம் வந்த வருமானத்திற்கான வரி ரூ.82.12 கோடி கட்டச்சொல்லி வருமான வரித்துறை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சுக்கு நோட்டீஸ் விட்டது. வருமான வரித்துறை மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், நோட்டீஸை ரத்து செய்யக்கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

அரசியல் செய்திகள்