ஐயா, நான் அந்தளவுக்கு வொர்த் இல்லை – அண்ணாமலை

ஐயா, நான் அந்தளவுக்கு வொர்த் இல்லை – அண்ணாமலை

சமீபத்தில் யாரோ கொடுத்த எக்ஸெல் தகவலை சரி பார்க்காமல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு எக்ஸெல் சீட் அண்ணாமலை என புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பி.ஜி.ஆர்., நிறுவனம் குறித்து அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் கருத்துத் தெரிவித்ததாகக் கூறி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம், 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அந்நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள், நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்!@arivalayam அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை! நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது!சந்திப்போம்! என்று பதிலளித்திருக்கிறார்.

அரசியல் செய்திகள்