என்னத்த சொல்றது? பார்த்திபன்

என்னத்த சொல்றது? பார்த்திபன்

சட்டத்தை நீதி/நிதி எதுக்கும் பயன்படுத்தலாம். அப்படியே சினிமாவையும்….நிறைய காசுக்கும் நல்ல causeக்கும்! ஒரு சினிமா மூலமாக சட்டத்தின் பயன்பாடு அதுவும் ஏற்கனவே (இருளர்கள்) இருண்டிருக்கும் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி அதையும் ‘இது ஒரு கமர்சியல்’ என்று வண்ணம் பூசிக் கொள்ளா வண்ணம் உலக அளவில் கமர்ஷியலாகவும் வென்றிருக்கும் திரைப்படத்தை பார்க்க துவங்கி கரைந்தே போனேன்.

சந்துரு சார்! இது பெயர் அல்ல. நீதி என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு. அவரை நான் நல்லது செய்யும் மேடைகளில் நடுநாயகராக அமர்த்தி கௌரவம் தேடி கொண்டுள்ளேன். அவரின் வாழ்க்கையை படமாக்கவும் ஆசைப்பட்டு உள்ளேன். அது இன்று திரு ஞானவேல் அவர்கள் மூலம் நிறைவேறி பிரபஞ்சம் சந்துரு சாரை பாராட்ட, மெய் சிலிர்க்கின்றேன். சினிமா மூலம் சமூகத்திற்கு கோடான கோடி நன்மை (not only one crore) செய்திருக்கும் மாண்புமிகு சூர்யா + ஜோதிகா அவர்களை மானசீகமாக வணங்குகிறேன் என்று இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகள்