எந்த முட்டாள் வரியை உயர்த்தினார்களோ அவர்கள் குறைக்கட்டும்:  முதல்வர்

எந்த முட்டாள் வரியை உயர்த்தினார்களோ அவர்கள் குறைக்கட்டும்: முதல்வர்

பெட்ரோல், டீசலுக்கு வாட் வரியைக் குறைக்க எங்களை எந்த முட்டாள் சொல்லியது. நாங்கள் இதுவரை வாட் வரியை உயர்த்தவே இல்லை. எந்த முட்டாள் செஸ் வரியை உயர்த்தினார்களோ அவர்கள் முதலில் குறைக்கட்டும் என்று மத்திய பாஜக அரசை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நாங்கள் வாட் வரியை ஒரு பைசா கூட உயர்த்தவில்லை என்பதால், வரியை குறைப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை. ஏழை மக்கள் மீது உண்மையிலே மத்திய அரசுக்கு அக்கறை, கருணை இருந்தால், செஸ் வரியை நீக்கட்டும்.

அரசியல் செய்திகள்