எடப்பாடி தந்தை, கி.பயபுள்ள சீமான்

எடப்பாடி தந்தை, கி.பயபுள்ள சீமான்

அடிச்ச சரக்கு இறங்குவதற்குள் பேட்டி என்று எதையாவது உளறி விட வேண்டும், இல்லேன்னா கோர்வையாக பொய் சொல்ல வராது என்பது தான் சீமான் நிலை.

தமிழக அரசியலில் விதவிதமான காமெடியன்கள் இருக்கிறார்கள். உதாரணமாக நம்ம ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் வடிவேலு மாதிரி பார்த்தாலே சிரிப்பு வந்துடும். தமிழக பிஜேபி தலைவர்கள் எல்.முருகன், காரைக்குடி ராஜா, சமத்துவ மக்கள் கட்சி நாகராஜன் ஆகியோர் ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்று பேசத் தொடங்கினாலே நமக்கு நகைக்கத் தோன்றும்.

ஆனால் நரம்பு புடைக்க ஆமைகறி, கறி இட்லி என்று பேசி நம்மை சிரிக்க வைக்கும் திறமை சீமானுக்கு மட்டுமே

எடப்பாடி பழனிச்சாமிக்கும், எங்களுக்கும் ஆன உறவு தந்தை மகன் போன்றது, அவர் சரியாக ஆட்சி தரவில்லை என்றால் நாங்கள் வந்து தருவோம் என்ற சமீபத்திய சீமான் பேட்டி மீண்டும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் 2014 போல் அதிமுக கால்களை அடிவருட தயாராகி விட்டது நாம் தமிழர் என்பதும் தெரிகிறது.

வழக்கம் போல் சினிமா கவர்ச்சி, என் மண், நானே ஆள்வேன் என்ற உளறலும்

political