எக்கேடு கெட்டு போங்க – ரஜினி மன்றம்

எக்கேடு கெட்டு போங்க – ரஜினி மன்றம்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் கட்சி ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கையில் இருந்த ரஜினி ரசிகர்கள், ரஜினி நான் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்று மூன்றாண்டுகளுக்கு முன்னால் வாக்குறுதி கொடுத்ததால் மாவட்டம், வட்டம் என்ற கனவில் மிதந்தார்கள்.

அதிசயம் அற்புதம்

அவர்களின் கனவை போன மாசம் ரஜினி சல்லி சல்லியாக உடைத்தவுடன், திசைக்கொருவராக கட்சிகளை தேடி அலைய ஆரம்பித்தார்கள்.

சிஸ்டம் சரியில்லை, மாத்தணும் என்று ரஜினி கூறிய அதிமுக மற்றும் திமுகவில் தற்போது இணைய தொடங்கி விட்டார்கள்.

ரஜினி மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்து விட்டு வேறு கட்சிகளில் சேர்ந்து கொள்ளலாம் என்று வேறு வழியின்றி ரஜினி அறிவித்திருக்கிறார்.

political Just Relaxing Latest Trending News