உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு – பாஜக எம்.பி கோரிக்கை

உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு – பாஜக எம்.பி கோரிக்கை

பாஜக எம்.பி., வருண் காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒராண்டாக விவசாயிகள் போராடி வந்தனர். தற்போது மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பல்வேறு கடினமான சூழ்நிலைகளில் நடந்த வேளாண் போராட்டத்தில் 700 விவசாயிகள் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். இந்த முடிவை முன்னரே எடுத்திருந்தால், உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும். அவர்களை துன்புறுத்துவதற்காக அரசியல் ரீதியில் போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியல் செய்திகள்