இரட்டை இலை முடக்கம் பின்னணியில் ஐவர்

இரட்டை இலை முடக்கம் பின்னணியில் ஐவர்

இரட்டை இலையை முடக்க சதி நடப்பதாக’ சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தனது பயத்தை வெளிப்படுத்திய நிலையில், அதிமுகவை உடைக்க பாஜக முயற்சிப்பதாக ஒரு வதந்தி தமிழக அரசியலில் நிலவி வருகிறது.

இதற்கு முன்பாக, ‘துரோகிகள் சிலர் நமது கட்சியிலேயே இருக்கிறார்கள்’ என்றும் சி.வி.சண்முகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் தீவிர ஆதரவாளர்களான ஓபிஎஸ், வேலுமணி, தங்கமணி, பாண்டியராஜன் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகிய ஐவர் அணி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பலமான செய்தி.

டீக்கடை வைத்து இருந்தவர் இன்று பணத்தில் மிதக்கிறார் என்று கமல், 2000 கோடி சொத்து கேரளாவில் மட்டும் வாங்கியிருக்கிறார் என்று தங்க தமிழ்ச்செல்வன் என்று அனைவர்க்கும்​தெரியும் படி சொத்து சேர்த்திருக்கும் ஓபிஎஸ் அதனை காப்பற்ற பிஜேபியிடம் சரண்டர் ஆகி வெகுகாலம் ஆகிறது.

குருமூர்த்தியின் இயக்கத்தில் உள்ள ஓபிஎஸ், ஆரம்பிக்காத ரஜினி கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஓபிஎஸ் ரவீந்திரநாத் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் தான் நேற்று நடந்த பிரச்சார கூட்டம் வரை மத்திய அரசுக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஓபிஎஸ் என்கிறார்கள்.

தனக்கு கிடைக்காத முதல்வர் பதவி யாருக்கு போனால் என்ன என்ற மனநிலைக்கு வந்து விட்டார் ஓபிஎஸ்.

 தொடர்ந்து கே.சி.பழனிச்சாமியால் பாஜக ஆதரவாளர்களாக குற்றம் சாட்டப்படும் வேலுமணி மற்றும் தங்கமணி ஆகிய இருவர் மீதும் தான் அதிக ஊழல் வழக்குகள் உள்ளன. தமிழக அமைச்சரவையில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வரும், இவர்களின் தனிப்பட்ட டெல்லி பயணங்கள் (உறவினர்களுடன்) இன்னும் மர்மமாகவே உள்ளது. 

பாஜகவின் பிரதிநிதியாக குருமூர்த்தியால், ஓபிஎஸ் உடன் அனுப்பி வைக்கப்பட்டவர் தான் அமைச்சர் ‘சமஸ்கிருத’ பாண்டியராஜன் என்பதால் அவர் இந்த அணியில் இருப்பதில் வியப்பில்லை.

கடைசியாக ‘மோடி டாடி’ ராஜேந்திர பாலாஜி, கட்சி பதவி பறிப்பு, ஆவினில் நுழைய தடை இதற்கெல்லாம் மேலாக கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு என்று சந்தித்து வரும் ராஜேந்திர பாலாஜி, ‘உப்புக்கு சப்பாணி’ யாக இந்த ஐவர் அணியில் உள்ளார். 

இவர்கள் ஐவரும் தான் ‘எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளர் இல்லை’ என்ற பாஜகவினர் எகத்தாளமான பேச்சுக்களுக்கு எதிராக இதுவரை வாயே திறக்காதவர்கள்.

குருமூர்த்தியின் கண் அசைவுக்காக இந்த ஐவர் அணி காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

political