இபிஎஸ்ஸை குறி வைக்கும் திமுக, ரசிக்கும் பாஜக

இபிஎஸ்ஸை குறி வைக்கும் திமுக, ரசிக்கும் பாஜக

விபத்தில் முதல்வரான இபிஎஸ், முதல்வரான பிறகு தானே கட்சி ஆரம்பித்து ஜெயித்தது போல் நடக்கத் தொடங்கி செய்த செயல்கள் சசிகலா, தினகரனை, ஓபிஎஸ் ஸை மட்டும் கோபப்படுத்தவில்லை திமுகவையும், ஸ்டாலினையும் மிக அதிக அளவு கோபப்படுத்தியுள்ளது. குறிப்பாக கலைஞர் இறப்பின் போது இபிஎஸ் நடந்து கொண்ட விதம் திமுகவை உச்சபட்ச வெறுப்பில் ஆழ்த்தியது.

வேலுமணி, விஜயபாஸ்கர் என்று ரெய்டு தொடர்ந்தாலும் திமுகவின் அல்டிமேட் குறி எடப்பாடி பழனிச்சாமி தான். ஆதாரங்களை திரட்டி வரும் திமுக முதலில் கையிலெடுத்த விவகாரம் கொடநாடு கொலை வழக்கு, ஏனென்றால் கொடநாடு விவகாரத்தில் இபிஎஸ்ஸை தவிர வேறு எந்த அதிமுகவினரும் சம்பந்தப் படவில்லை.

தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவன் சம்பந்தப்பட்ட இடங்களில் நடக்கும் ரெய்டு, அடுத்த நடவடிக்கை இபிஎஸ் மேல் தான் என்று திமுகவினர் உறுதி பட சொல்கின்றனர். அதிமுகவின் முன்னாள் கோவை மாவட்ட அதிமுக அமைச்சர் ஒருவர் அப்ரூவராக மாறியுள்ளதாக ஒரு தகவல்.

கூட இருந்தே அழிக்கும் மிக உயரிய நற்பண்புக்கு பெயர் போன பாஜக அதிமுக தடுமாற்றத்தை ரசிக்கிறது.

அரசியல் செய்திகள்