இடைத்தேர்தல் – டெபாசிட் இழந்த பாஜக

இடைத்தேர்தல் – டெபாசிட் இழந்த பாஜக

மேற்கு வங்க சட்டசபை இடைத்தேர்தல் நடந்த, நான்கு தொகுதிகளையும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த நான்கில், மூன்றில் பா.ஜ.கா ‘டிபாசிட்’ இழந்தது.

பாஜக ஆளும் மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் இடைத் தேர்தல் நடந்த ஒரு லோக்சபா தொகுதி மற்றும் மூன்று சட்டசபை தொகுதிகளிலும் காங்., வென்றது.

மத்திய பிரதேசத்தில், ராய்கான் சட்டசபை தொகுதியில் 31 ஆண்டுகளுக்கு பின், காங்., வென்றுள்ளது.

கர்நாடகாவில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டமான ஹவேரியில் உள்ள ஹனகல் தொகுதியில், காங்., வேட்பாளர் 7,373 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

அரசியல் செய்திகள்