ஆளுநர் / திமுக – புதிய கல்விக் கொள்கை

ஆளுநர் / திமுக – புதிய கல்விக் கொள்கை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உடன் வேந்தர்/ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு 20 பல்கலைக்கழகங்களைக் கொண்டிருப்பதையும், Gross Enrolment Ratio எனப்படும் கல்லூரி மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளதையும் பாராட்டியதாக தெரிகிறது.

மேலும் புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல திட்டங்கள் உள்ளதால் அதைப் பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த முன்வரவேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. திமுக புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

அரசியல் செய்திகள்