அ.தி.மு.கவை அழிக்கும் வரை கூட்டணியை தொடர பா.ஜ.க  விருப்பம்

அ.தி.மு.கவை அழிக்கும் வரை கூட்டணியை தொடர பா.ஜ.க விருப்பம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் மற்றும் தற்போது நடைபெற்ற ஒன்பது மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வினர் நாம், கேட்ட இடங்களை தரவில்லை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதைத் தொடர்வார்கள். நமது பலத்தை தெரிந்து கொள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது தான் நல்லது. அ.தி.மு.க., கூட்டணி வேண்டாம்’ என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், பெரும்பாலோனோர் ‘தி.மு.க.,வின் ஆட்சி பலம், பண பலத்தை, பா.ஜ.,வினரால் தனித்து எதிர்கொள்ள முடியாது. இந்த சூழலில், அ.தி.மு.க., உடன் கூட்டணியை தொடர்வது தான், பா.ஜ.க வளர்வதற்கு உதவியாக இருக்கும்’ என்று அதிமுகவை தொடர்ந்து அழிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அரசியல் செய்திகள்