அழிவை நோக்கி அம்மா உணவகங்கள் – கமல் கேள்வி

அழிவை நோக்கி அம்மா உணவகங்கள் – கமல் கேள்வி

அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கொரோனாவிற்கு பிறகு பன்மடங்கு பெருகியுள்ளது. திமுக அரசும் அம்மா உணவகங்களை கைவிடும் எண்ணமில்லை என அறிவித்திருந்தது. ஆனால் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேர உணவு முறையில் மாற்றம் செய்துள்ளதாகவும், பணியாட்களை குறைத்து வருவதாகவும் வெளியாகும் தகவல்கள் கவலையளிக்கின்றன.

அம்மா உணவகங்களில் இரவு உணவுக்கு, சப்பாத்தி தயாரிக்கப்பட்டு வந்தது. இது அரசு மருத்துவமனை நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், முதியோருக்கு பயனுள்ளதாக இருந்தது. மேலும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் திடீரென பணிநீக்கமும், பணியிட மாற்றமும் நிகழ்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு வாயிலாக இதை நிறைவேற்றியிருப்பதாக சொல்கின்றன ஊடகங்கள்.

சென்னை மாநகராட்சி தன் வருவாயை பெருக்கிக் கொள்ள பல வழிகள் இருக்கையில், சிறிய நட்டத்தை காரணம் காட்டி இத்தகைய நல்ல திட்டங்களை சிதைப்பது மக்கள் நலன் நாடும் அரசுக்கு அழகல்ல, இத்திட்டத்தின் கீழ் பலனடையும் பணியாளர்கள், பயனாளிகள் அனைவருமே சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு கமல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் செய்திகள்