அர்ஜூன் சம்பத் மீது வழக்கு

அர்ஜூன் சம்பத் மீது வழக்கு

கோவை மாநகர போலீஸார், வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், கடந்த 7-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘திரைப்பட நடிகர், விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூ.1,001 வழங்கப்படும் என பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடைவீதி போலீஸார் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வேண்டுமென்ற அவமதிப்பு செய்தல், இரு தரப்பினரிடையே மோதலை தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

அரசியல் செய்திகள்