அமெரிக்காவிற்கு தகுதி கிடையாது – அண்ணாமலை

அமெரிக்காவிற்கு தகுதி கிடையாது – அண்ணாமலை

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், இந்தியாவுக்கு  சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க சுற்றுலா பயணியருக்கு, குறிப்பாக அமெரிக்க பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் வன்முறைகள்  அதிகரித்திருப்பதால் இந்த எச்சரிக்கை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இது சம்பந்தமாக பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ” அமெரிக்க பெண்கள் இந்தியாவிற்கு தனியாக சுற்றுலா செல்ல வேண்டாம் என்று பேச அந்த நாட்டிற்கு தகுதி கிடையாது?. நியூயார்க் நகரத்தில்தான் அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. கண்ணாடி கூண்டில் இருந்து கொண்டு கல் வீசக்கூடாது. இந்தியாவுக்கு அமெரிக்கர்கள் சுற்றுலா வரக் கூடாது என்பதற்காக அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

இந்தியா பெண் தெய்வங்கள் அதிக அளவில் இருக்க கூடிய நாடு. இங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது” என்று தெரிவித்தார்.

நகைச்சுவை செய்திகள்