அமித்ஷா மீட்டிங்கை கண்டு கொள்ளாத முதல்வர்கள்

அமித்ஷா மீட்டிங்கை கண்டு கொள்ளாத முதல்வர்கள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் திருப்பதியில் தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தெலுங்கானா & புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அந்தமான் நிக்கோபர் துணை நிலை ஆளுநர் ஜோஷி, ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, லட்சத்தீவுகள் நிர்வாகி பிரபுல் படேல் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் பங்கேற்கவில்லை. தெலுங்கானா சார்பில் உள்துறை அமைச்சர் முகமது அலி, கேரளா சார்பாக நிதி அமைச்சர் பாலகோபால், தமிழகத்தில் இருந்து அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டனர்.

அரசியல் செய்திகள்