அப்பாவுக்கு ‘பாபா’ எனக்கு ‘ஜெய் பீம்’ – ராஜ்யசபா அன்புமணி

அப்பாவுக்கு ‘பாபா’ எனக்கு ‘ஜெய் பீம்’ – ராஜ்யசபா அன்புமணி

மழை வெள்ளத்தால் பொழுது போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்ததால், அடுத்து என்ன செய்யலாம் என்று நீண்ட ஆலோசனைக்குபின், பிரபலமான நடிகர்களை வம்புக்கிழுக்கும் தந்தையின் வழியில் இறங்கியுள்ளார் ‘மாற்றம் முன்னேற்றம்’ அன்புமணி. ஊரில் யார் படம் எடுத்தாலும், எங்களைப்பற்றி தான் சொல்கிறார்கள் என்று கிளம்பும் குரூப் அன்புமணியை ‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராக திருப்பியிருக்கிறது.

இலவச ஆலோசனைகளையும், கூடவே நகைச்சுவையாக பயமுறுத்தும் அறிக்கையும் வெளியிட்டுள்ளார் சின்னய்யா! பாபா’ பட விவகாரத்துக்குப்பிறகு தலை தூக்காத பாமக, இப்போது தான் அதிமுக தயவில் நாலு எம்எல்ஏ தொகுதி ஜெயித்து உள்ளது. எனவே சொந்த தொகுதியில் போட்டியிட்டு இது வரை ஜெயிக்கவே முடியாத அன்புமணி இந்த மாதிரி கடிதம் எழுதுவதற்கு முன்பு கட்சியின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து கொள்வது சாலச் சிறந்தது.

அரசியல் செய்திகள்