அன்புமணி அழுகை வீண் -வன்னியர்களுக்கு 10.5 % ஒதுக்கீடு ரத்து

அன்புமணி அழுகை வீண் -வன்னியர்களுக்கு 10.5 % ஒதுக்கீடு ரத்து

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது, எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீட்டிற்கு முன்பாக அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட சட்டம், திமுக அரசு பதவியேற்ற பிறகு அரசாணையிலும் வெளியிடப்பட்டது.

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று 50க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா, மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா, உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அரசியல் செய்திகள்