அதிசயம் அற்புதம் அழகிரி

அதிசயம் அற்புதம் அழகிரி

அழகிரி என்ன பெயரில் கட்சி ஆரம்பிப்பார், ‘கலைஞர் கொலைகார கழகம்’ ‘கலைஞர் அல்லக்கைகள் கழகம்’ ‘கலைஞர் அடியாட்கள் கழகம்’ என்ற ஏதாவது பெயரில் தான் ஆரம்பிக்க முடியும், அதைத் தாண்டி சிந்திக்க அழகிரியாலும் முடியாது, அவரால் அடித்து வளர்க்கப்பட்ட பாஜக ‘காரைக்குடி ராஜாவாலும் முடியாது.

அழகிரிக்கு என்ன சிறப்பு தகுதி என்றால் ஆளுங்கட்சியாக இருக்கும் போது அல்லது ஆளுங்கட்சியாக ஆகப் போகிறோம் என்று தெரிந்தால் மட்டுமே அரசியல் செய்வார். மற்ற நேரங்களில் அவருடைய தொண்டர்களைப் போல் மிகப் பெரிய தொடை நடுங்கி அழகிரி, என்பது தமிழகத்திற்கே தெரியும்.

லீலாவதி, தா.கிருஷ்ணன் மற்றும் சன் டிவி வழக்குகளில் சம்பந்தப்பட்ட அழகிரியின் அல்லக்கைகள் அனைவரும் திமுகவில் தற்போது பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

அழகிரி விழாவில் பங்கேற்ற அனைவரும் மூன்றாம் நிலை அல்லக்கைகள், பிஜேபியின் அண்ணாமலை, குஷ்பு, முருகன் போன்ற நிலையில் இருப்பவர்கள், இவர்கள் சொல்வது, இவர்களுக்கே புரியாது என்பது தான் விசேஷம்.

சசிகலா, ஜெயலலிதா நடத்திய வளர்ப்பு மகன் திருமணத்திற்கு சற்றும் குறையில்லாதது அழகிரி மகன் திருமண நிகழ்வுகள். அங்கே பாலு ஜீவல்லர்ஸ் என்றால் இங்கே ஆலுக்காஸ். என்ன அங்கே பாலு ஜீவல்லர்ஸ் முதலாளி செத்து போனார், இங்கே அழகிரியின் அல்லக்கைகள் மிரண்டு போனார்கள் என்பது தான் வித்தியாசம்.

பாராளுமன்றத்தில், வாயே திறக்காமல், ஐந்து வருடங்கள் மத்திய அமைச்சராக (மோடிக்கு பிறகு) இருந்த பெருமை அழகிரிக்கு உண்டு. ஓட்டுக்கு ₹500 கொடுத்தும், மதுரையில் ஓட்டு விழாமல், மேலூரில் வாங்கிய ஓட்டுக்களால் துண்டைக் காணோம், துணியை காணோம் என்று ஜெயித்தார் அழகிரி.

அதிமுக மற்றும் பாஜக தலைமைகளின் பேராதாரவில் பேசிய அழகிரிக்கு என்ன கஷ்ட காலமென்றால் அவருக்கும், அவருடன் இருப்பவர்களுக்கும் அவர்கள் ஓட்டையே போடத் தெரியாது என்பது தான்.

 

அழகிரி எப்போதும் மதுரையின் ‘மிகப் பெரிய காமெடி கிங்’ என்பதில் சந்தேகமில்லை. அவருடைய ஒரே போட்டியாளர் தெர்மோகோல் கிங் ராஜீ பாய்.

political