அண்ணாத்தேல கொரானா, டேய் அப்ப கட்சி

அண்ணாத்தேல கொரானா, டேய் அப்ப கட்சி

ரஜினி அரசியலுக்கு வருவதற்கு தான் எத்தனை தடங்கல்கள், மூன்று வருடத்திற்கு முன்பே நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிய ரஜினி, பாவம் போன மாசம் தான் கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ந்தேதி (?) அறிவிப்பேன் என்று சூளுரைத்தார்.

இப்போ என்னடான்னா, பாவம்​ அண்ணாத்தே படக்குழுவில் கொரானாவாம், ரஜினிக்கு கொரானா இல்லையென்றாலும் தனிமைப்படுத்தி கொண்டாராம். அப்போ கட்சி குறித்த அறிவிப்பு​ 31ந்தேதி வருமா அல்லது மூர்த்தியும், மணியனும் அறிவிப்பார்களா என்று தெரியவில்லை.

இதற்கிடையில் கட்சி மட்டும் தான் பாக்கி, மக்கள் எல்லாம் ரஜினிக்கு ஓட்டுப்போட பூத் வாசல்ல காத்துக் கிட்டிருக்காங்க என்ற ரேஞ்சில், சற்றே மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல பேசும் கராத்தே தியாகராஜன், பிரவீன் காந்தி போன்றவர்கள் இதுகுறித்து சேனல்களில் என்ன உளரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

Cinema & Entertain political